சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா துவக்கம்!
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் கலாசார கொலு கண்காட்சி, நவராத்திரி விழா துவங்கியது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா, நேற்று துவங்கியது. இதையொட்டி, ஜகந்நாதரிடம் சரணடைந்து வாழ்ந்த பக்த அங்கபூபதியின் வாழ்க்கை சரிதத்தை சித்திரிக்கும் வகையில், கலாசார கொலு கண்காட்சி வைக்கப்பட்டது.
சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி, ஆசியுரை வழங்கினார். ஆசிரம சேவா பிரதிஷ்டான் இயக்குநர் ஆத்ம விகாச ப்ரியா அம்பா வரவேற்றார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சுபாஷ்சந்திர பரிஜா, ஜோதிர்மயி பரிஜா ஆகியோர், கொலு கண்காட்சியினை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினர்.
மதியம் 1:30 மணிக்கு, ஜகந்நாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தேரில் உலா நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 3: 30 மணிக்கு திரைப்பட இயக்குநர் வசந்த்சாய், 16ம் தேதி மாலை, திருவள்ளுவர் பல்கலை கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன், 17ம் தேதி மாலை, தமிழக வேளாண் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, அப்போலோ மருத்துவமனை குழந்தை நல டாக்டர் டோலி லேக்கானி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். வரும் 18ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், 19ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், 20ம் தேதி சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு, சென்னை பச்சையப்பா கல்லுாரி பேராசிரியர் பாரதி, 21ம் தேதி நிதித் துறை முதன்மை செயலர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.