உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா துவக்கம்!

நவராத்திரி விழா துவக்கம்!

இளையான்குடி: தாயமங்கலம்முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா விசேஷ பூஜையுடன் துவங்கியது.

மாலை 5மணிக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது.தினமும் மாலை 4.30 மணிக்கு கும்பம் வைத்து சந்தன அலங்காரம் செய்து சிறப்பு பூஜை,அபிஷேகம் நடக்கும். அக்.16 பகல் 2மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜை நடக்கிறது. தினமும் மாலை 4.20 மணிக்கு கும்பம் வைத்து, சந்தன அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.அக்21 மற்றும் அக்22ல் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகத் திற்குபின் அம்மன் வெள்ளி அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன்செட்டியார் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !