உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி உற்சவம் துவக்கம்!

நவராத்திரி உற்சவம் துவக்கம்!

திருவள்ளூர்: திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி உற்சவம் துவங்கியது.காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் மாலை, காமாட்சி அம்மன் அலங்காரத்தில், அம்பாள் உள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர், பூங்கா நகரில் உள்ள, சிவ - விஷ்ணு கோவிலில், நவராத்திரியின் முதல் நாளான நேற்று, பூங்குழலி அம்பாளுக்கு, காலை 9:00 மணிக்கு, அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, தேர் உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !