ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3705 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது.
பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.
அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.