சீர்காழி கோயில் கோபுரத்தில் சிவனடியார் மவுன போராட்டம்!
மயிலாடுதுறை: கோவை மாவட்டம் வேளான்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(43) சிவனடியாரான இவர் இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளராக உள்ளார். நேற்று செந்தில்குமார், கோவை தொண்டா முத்தூர் பிரகதீஸ்வரன்(52)ஆகியோர் நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஸ்ரீ சட்டைநாதர் கோயிலுக் கு வந்துள்ளனர்.அங்குள்ள குளத்தில்நீராடிய செந்தில்குமார் கோயிலில் தெற்குகோபுரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து மௌன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையறிந்த திரளான மக்கள் அங்கு குவிந்தனர். இது குறித்து தகவலறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார், தீயனைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து கோபுரத்தின் மீதுஏறி சிவனடியார் செந்தில்குமாரை பாதுகாப்பாக கீழே இறக்கினர். பின்னர் செந்தில்குமாரையும்,பிரகதீஸ்வரனையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துசென்ற னர்.அங்கு அவர்களிடம் டி.எஸ்.பி.வெங்கடேசன் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது வெ ள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் பிரகாரத்தில் விதிகளுக்கு மாறாக பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள முருகன் மற்றும் வள்ளி,தொய்வானை சிலைகளை அகற்ற வேண்டும், அந்த சிலைகளை கோயிலில் பிரதிஷ்டைசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், சிவனடியார்களை மாதம் 6முறை கோயி லில் பூஜை செய்ய அனுமதிக்கவேண்டும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செ ய்து தரவேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ந டவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் திருஞான சம்பந்தர் அவதரித்ததும்,தேவாரத்தில் முதல் பதிகம் பாடப்பெற்றதுமான இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசட்டைநாதரிடம் முறையிடுவதற்காக கோபுரத்தில் ஏறி தியானத்தில் ஈடுபட்டேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் பின்னர் விடுவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.