மசினியம்மன் கோவில் திருவிழா!
ADDED :3644 days ago
கூடலுார்: மசினகுடி, மசினியம்மன் கோவிலில், தசரா திருவிழா துவங்கியது.
கர்நாடக மாநிலம், மைசூரில் ஆண்டு தோரும், தசரா திருவிழா நடக்கிறது. அதே நாளில், முதுமலை அருகே உள்ள மசினகுடி மசினியம்மன் கோவிலும் விழா துவக்கப்படுகிறது. நேற்று துவங்கிய இவ்விழாவில், மசினியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து, அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். வரும் ஒன்பது நாட்களுக்கு இங்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன.