உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டியில் நவராத்திரி விழா கோலாகலம்!

ஊட்டியில் நவராத்திரி விழா கோலாகலம்!

ஊட்டி: ஊட்டியில் உள்ள கோவில், வீடுகளில் நவராத்திரி விழா நடந்து வருகிறது.
ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும் நவராத்திரி திருவிழா மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகாளிய அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். நவராத்திரி சிறப்பு வழிபாடுகள் தினமும் மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. 21ல் சரஸ்வதி அலங்காரங்களில் சிறப்பு வழிபாடுகளும், அர்ச்சனை ஆராதனைகள் நடக்கின்றன. 22ம் தேதி காலை, 10:30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

அம்பு சேவை: விஜயதசமியான, 22ல், ஊட்டி மாரியம்மன் கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், நீலாம்பிகை பீடம் ஹரிஹரன் பஜனை சபா, ஆர்.கே.புரம் கருவலூர் மாரியம்மன் கோவில், மேட்டுச்சேரி மூவுலகரசிம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் உட்பட ஒன்பது கோவில்களில் இருந்து அம்மன் ஊர்வலம் ஊட்டி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை நடக்கிறது. அங்கு பாறை முனீஸ்வரர் கோவில் அருகே இரவு,8:00 மணிக்கு அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதேபோன்று, ஊட்டியில் பல வீடுகளிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !