அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை!
ADDED :3643 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூரில் உள்ள பூரண புஷ்கலா சமேத குளங்கரை கூத்த அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழா நடந்தது. இங்கு ஆக.,27 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேக பூஜை நடந்தது. நிறைவு: 48ம் நாளில் மண்டலாபிஷேக பூஜை முதற்கால யாகசாலையுடன் துவங்கின. குன்றக்குடி திருநீலகண்ட நாயனார் மடாலயம் பாண்டிசெல்வம் சிவாச்சாரியார் பூஜை நடத்தினார். நேற்று காலை 8 மணிக்கு யாகசாலை பூஜையுடன் மண்டலாபிஷேகம் முடிந்தது.