லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு வழிபாடு!
ADDED :3642 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி சிறப்பு ஹோமங்கள் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், புரட்டாசி மாத சுவாதியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கலச ஸ்தாபனம், லஷ்மிநரசிம்ம, ஆஞ்சநேய, சுதர்சன ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து முற்பகல் 11:00 மணிக்கு லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு வேதபாராயணமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.