உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்!

கோவை கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்!

கோவை: கோவையிலுள்ள கோவில்களில் நவராத்திரி விழா, கோலாகலமாக நடந்து வருகிறது. புரட்டாசி மாதத்தில், பிரதமை திதியில் துவங்கி, ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படும். அன்றைய தினம், கோவில்களில் முப்பெரும் தேவியரை துதித்து, பூஜிக்கின்றனர். கோவில் வளாகத்தில், 12, 9, 6, 3 என்ற வரிசைகளில் கொலு பொம்மைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். ஆர்.எஸ்.புரம், காமாட்சியம்மன் கோவில், அன்னபூர்ணேஸ்வரி கோவிலில், கொலுபொம்மை படிகளில் அகர வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் முப்பெரும் தேவியர் மற்றும் பிரம்மா, விஷ்ணு, சிவன், விநாயகர், முருகன் ஆகிய உருவங்களில் கொலுபொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. 12 படிகளில் வரிசையாக கொலுபொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை குழந்தைகளும், பெரியவர்களும் பார்வையிட்டனர். வைசியாள் வீதியிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், சலிவன்வீதி, செட்டிவீதி சந்திப்பிலுள்ள காமாட்சியம்மன் கோவில், சித்தாபுதுார் அய்யப்பன் கோவில், ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர், கவுலிபிரவுன் ரோட்டிலுள்ள துர்கையம்மன் கோவில்களில் சிறப்பு கொலு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம், வளையல் ஆகிய மங்கல பொருட்களும், எவர்சில்வர் தட்டு, குங்குமச்சிமிழ், ரவிக்கை துணி ஆகியவை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !