உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 22ல் நாகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

22ல் நாகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

ஊத்துக்கோட்டை: பகுதிவாசிகள் பங்களிப்புடன் கட்டப்பட்டு வரும் நாகவல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில், பகுதிவாசிகள் பங்களிப்புடன் ஸ்ரீநாகவல்லி அம்மன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இறுதி கட்டப்பணிகள் நடைபெற்றுவரும் இக்கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும், 20ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 04:30 மணிக்கு, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, ஆலய சுத்தி, கோ பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா துவங்குகிறது. மறுநாள், 21ம் தேதி காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜை, கோ பூஜை, தன பூஜை, கங்கா பூஜையும், மதியம் 2:00 மணிக்கு, பிம்பசுத்தி, கலா கர்ஷனம், தசதர்சனம், சயனாதிவாசம், முதல்கால யாகசாலை பூஜையும், இரவு 6:00 மணிக்கு, 2ம் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், சக்தி ஹோமம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நாளான, 22ம் தேதி காலை 7:30 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம் நிகழ்ச்சிகளும், காலை 9:05 மணிக்கு, கும்பாபிஷேகமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !