உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடையூறு கோவிலை அகற்ற புதிய கோவில் அமைப்பு!

இடையூறு கோவிலை அகற்ற புதிய கோவில் அமைப்பு!

மாமல்லபுரம்: வாயலுார் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக உள்ள, முத்து மாரியம்மன் கோவிலை அகற்ற, 70 லட்சம் ரூபாயில், புதிய கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, கல்பாக்கம் அடுத்த வாயலுார் பகுதி, அரசு உயர்நிலைப் பள்ளி பகுதி துவங்கி, பாலாற்றங்கரை பகுதியின், கடலோர காவல் சோதனை சாவடி வரை, ஆபத்தான வளைவுகள் கொண்டதாக அமைந்துள்ளது. இதையடுத்து, வளைவு பகுதியை விரிவுபடுத்தி சாலையை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இங்கு, ஆயப்பாக்கம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் இணையும் பகுதியில் உள்ள, முத்துமாரியம்மன் கோவில், சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்தது. அதுகுறித்து ஆய்வு செய்த கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், கோவிலை அகற்றி, பாலாற்றங்கரை புறம்போக்கு நிலத்தில், புதிய கோவில் நிர்மாணிக்க, கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார். கிராமவாசிகளும் அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டனர். மேலும், பாலாற்று பாலம் கட்டும் நிறுவனத்திடம், புதிய கோவில் அமைக்க கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார். தனியார் ஒப்பந்த நிறுவனம், ஆற்றங்கரை பகுதியில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கோவிலை அமைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !