சீரடி சாயிபாபா கோவிலில் 22ம் தேதி ஆராதனை விழா!
ADDED :3644 days ago
புதுச்சேரி: ஸ்ரீசீரடி சாயி பாபாவின் மகா சமாதி தினத்தையொட்டி, ஸ்ரீசீரடி சாயிபாபா சேவா சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் சீரடி சாயி பாபா சேவா சமிதி சார்பில் பிள்ளைச்சாவடியில் உள்ள சாயிபாபா கோவிலில் வரும் ௨௨ம் தேதி ஆராதனை விழா நடக்கிறது. அன்று காலை ௮:௦௦ மணிக்கு கொடியேற்றி 9.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11.30 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடக்கிறது. பகல் 12.00 மணிக்கு ஆரத்தி, அன்ன தானம் நடக்கிறது. மாலை 2.15 மணிக்கு சாய் பக்தர்களால் எழுதப்பட்ட ஸ்ரீசீரடி சாய்பாபாவின் நாமாவளிகள் பூமிக்கு அர்ப்பணம் செய்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 6.00 மணிக்கு ஆரத்தி, பிரசாதம், மாலை 6.20 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8.00 மணிக்கு ஆரத்தி, பிரசாதம் வழங்கப்படுகிறது.