உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் ஐந்து முறை அண்ணாமலையை சுற்ற வலுவிருக்கிறதா?

ஒரே நாளில் ஐந்து முறை அண்ணாமலையை சுற்ற வலுவிருக்கிறதா?

திருவண்ணாமலையை ஒரு முறை வலம் வருவதற்கே, பக்தர்கள் சிரமப்படுகிறார்கள். ஆனால், மனதில் தைரியத்துடன் ஒரே நாளில் ஐந்து முறை தொடர்ந்து சுற்றுவதற்கு மனபலம் இருந்தால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என அண்ணாமலை புராணம் தெரிவிக்கிறது. அண்ணாமலையின் சுற்றளவு 14 கி.மீ. ஐந்து முறை நடந்தால் 70 கி.மீ ஒரே நாளில் நடக்க வேண்டும். முடியும் என நினைக்கும் பக்தர்கள், இதயநோய் இல்லாதவர்கள், நல்ல ஆரோக்கியம் உடையவர்கள், இளைஞர்கள் இதற்கான முயற்சியை எடுத்தால் வாழ்நாள் முழுவதும் ஆன்மபலம் கிடைப்பதுடன் எதிர்கால துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !