பாடலீஸ்வரர் கோவிலில் லட்சதீப விழா!
ADDED :3702 days ago
கடலுார்: கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் நாளை லட்சதீப விழா நடக்கிறது. கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் கடந்த 13ம் தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி தினமும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. அம்மன் தினசரி ஒரு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாளை (18 ம் தேதி) மாலை லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், தங்கக் கவசம் அணிந்து மகா தீபாராதனையும் நடக்கிறது. பின்னர், இலுப்பை எண்ணெய் கொண்டு ஒரு லட்சம் திருவிளக்குகள் ஏற்றி பூஜை நடக்கிறது.