சிங்கவரம் கோவிலில் மகா சண்டீ ஹோமம்
ADDED :3645 days ago
செஞ்சி: சிங்கவரம் குமராத்தம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு மகா சண்டீ ஹோமம் துவங்கியது. செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமராத்தம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகா சண்டீ ஹோமம், கடந்த 13ம் தேதி துவங்கியது. இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இந்த ஹோமம் நடத்தப்பட்டது. இதில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை செய்கின்றனர். தினமும் மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டையும், விநாயகர் பூஜையும், இரவு 9:00 மணிக்கு பூர்ணா ஹூதியும், தொடர்ந்து கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.