சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி அருள்பாலிப்பு!
ADDED :3646 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தது. கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோவில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் உற்சவர் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பூலோகநாதர் கோவிலில் அலர்மேலு மங்கை தாயார் சமேதராய் பிரசன்ன வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.