வரதராஜ பெருமாள் கோவிலில் பொதுமக்கள் சுவாமி தரிசனம்!
ADDED :3769 days ago
பரங்கிப்பேட்டை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையையொட்டி பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனையொட்ட, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மூலவர் சீனிவாச பெருமாள் அலங்காரத்திலும், உற்சவமூர்த்தி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அலங்காரத்திலும் அருள்பாளித்தனர். தொடர்ந்து நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 10வது நாள் குதிரை வாகனத்தில் அம்பு போட்டு வீதியுலா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் பரம்பரை டிரஸ்டி வரதராஜ பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.