உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை, மாளிகைப்புறம் மேல் சாந்திகள் தேர்வு!

சபரிமலை, மாளிகைப்புறம் மேல் சாந்திகள் தேர்வு!

சபரிமலை: சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோவில்களுக்கு கார்த்திகை, 1ம் தேதி முதல், ஓர் ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலையில் கார்த்திகை, 1ம் தேதி முதல் ஓர் ஆண்டு காலத்துக்கு புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுகின்றனர். கேரள ஐகோர்ட் வழிகாட்டுதல் படி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர்கள் சுபாஷ்வாசு, ஐகோர்ட் நியமித்துள்ள ஸ்பெஷல் கமிஷனர் பாபு, தேவசம் செயலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில், இந்த தேர்வு நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு துண்டு சீட்டுகள் அடங்கிய பாத்திரத்துக்கு பூஜைகள் நடத்தி கொடுத்தார். பின்னர் பந்தளம் அரண்மனை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சரண் வர்மா துண்டுகளை எடுத்தார். முதலில் எடுக்கப்பட்ட ஏழு பேருக்கு நேராக வெற்றுச்சீட்டு வந்தது.

எட்டாவது சீட்டாக கோட்டயம் மாவட்டம், மன்னார்காடு, அயர்குன்னம் காரக்காட்டு இல்லத்தில் எஸ்.இ.சங்கரன் நம்பூதிரி பெயருக்கு நேராக, மேல்சாந்தி சீட்டு வந்ததால் அவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதுபோல மாளிகைப்புறம் கோவிலுக்கு நான்கு பேர் பட்டியல் குலுக்கப்பட்டது. திருச்சூர் தலப்பள்ளியைச் சேர்ந்த, இ.எஸ்.உன்னிகிருஷ்ணன் மாளிகைப்புறம் மேல்சாந்தியாக அறிவிக்கப்பட்டார். பக்தர்கள் கூட்டம்: ஐப்பசி 1ம் தேதியான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !