உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!

விழுப்புரம்: வளவனுõர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமையில் மூலவர், கிருஷ்ணர் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம்,  சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும்  அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, லட்சுமி நாராயண பெருமாள், கிருஷ்ணர்  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !