உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் இசை பிரளயம் நாட்டிய நிகழ்ச்சி!

அவிநாசியில் இசை பிரளயம் நாட்டிய நிகழ்ச்சி!

அவிநாசி: அவிநாசி சலங்கை நிருத்யாலயா சார்பில், ஸ்வரஜதி எனும் இசையும் பரத நாட்டியமும் நிகழ்ச்சி, பாப்பீஸ் ஓட்டலில் நடந்தது. பிரபல சிதார் இசை கலைஞர்கள் சிவராமகிருஷ்ண ராவ் தலைமையில், பக்கவாத்திய கலைஞர்கள் ராகவேந்திரராவ் (வயலின்), சடார்ச் சாலமன்  (வாய்ப்பாட்டு), தனுஷ் (கீபோர்டு), ராமகிருஷ்ணன் (மிருதங்கம்), வெங்கடேஷ் (தபேலா), சுப்பாராவ் (கடம்), முரளி கிருஷ்ணன் (டிரம்ஸ்) ஆகி÷ யார், கர்நாடக சாஸ்திரிய இசை விருந்து அளித்தனர். நாட்டிய பள்ளி நிர்வாகி தேவிகா தலைமையில், அவிநாசி மற்றும் திருப்பூரை சேர்ந்த  மாணவியர், நவராத்திரி தொடர்பான நடனங்களை ஆடி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். பிரபல குச்சுப்புடி நடன கலைஞர் பாலதிரிபுர சுந் தரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடனமாடினார். பங்கேற்ற கலைஞர்களுக்கு, ஈஸ்ட்மேன் நிறுவன இயக்குனர் தேவி பரிசு வழங்கினார்.  சலங்கை நிருத்யாலயா பொறுப்பாளர் வடிவேல் நன்றி கூறினார். கிரி யேட்டிவ் கிளப் நிறுவனர் கார்த்திக், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !