உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி இராமர் கோயிலில் புரட்டாசி திருவிழா

தாண்டிக்குடி இராமர் கோயிலில் புரட்டாசி திருவிழா

தாண்டிக்குடி: தாண்டிக்குடி இராமர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா மூன்று நாள் நடந்தது.முதல் நாள் பூப்பல்லாக்கில் சர்ப்பவ வாகனத்தில் உற்சவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளல், இரண்டாம் நாள் சிம்ம வாகனம், மூன்றாம் நாள் குதிரை வாகனத்தில் சவுமிய நாராயணப் பெருமாள் நகர் வலம் வந்தார். முக்கிய வீதிகளில் பக்தர்கள் மண்டகப்படி அபிஷேகம் செய்தனர். மஞ்சள் நீராட்டு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இளைஞர்கள் சார்பாக அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !