உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாயிபாபா சமாதியில் ஆராதனை விழா

ஷீரடி சாயிபாபா சமாதியில் ஆராதனை விழா

கரூர்: ஷீரடி சத்குரு ஸ்ரீ சாயிபாபா, 97 வது மஹா சமாதி ஆராதனை விழா, கரூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள, ஷீரடி ஸ்ரீ சாயி சேவா சமாஜத்தில், அக்., 23ம் தேதி நடக்கிறது. காலை 6 மணிக்கு ஆரத்தி, 7 முதல் 9 மணி வரை கணபதி ஹோமம் நடக்கிறது. மூலவர், உற்சவர் பாபாவுக்கு, 108 சங்காபிஷேகம், உற்சவருக்கு சகல அபிஷேகம், 10 முதல், 11 மணி வரை பாபா சகஸ்ர நாம அர்ச்சனை, 11 மணி முதல், 12 மணி வரை புஷ்பாஞ்சலி நடக்கிறது. மாலை, 5 முதல், 5.30 மணி வரை, திருக்குரான் ஓதுதல், மாலை, 5.30 முதல், 6.30 மணி வரை, பாபா தேரில் பவனி, மாலை 6.30 முதல், 9 மணி வரை, சாயி பஜனை, இரவு 9 மணிக்கு ஆரத்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !