தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ஆடிக்கார்த்திகை விழா
ADDED :5303 days ago
தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ஆடிக்கார்த்திகை விழா நடந்தது. காரைக்குடி நகரத்தார் அறுபத்து மூவர் மடத்திலிருந்து புறப்பட்டு கண்ணப்பன், நாச்சியப்பன் தலைமையில் 75 பேர் காவடி, பால்குடம் எடுத்து மலைக்கோயிலுக்கு வந்தனர். பாலபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமி ஆறுமுக கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரோட்டம், திரு உலா நடந்தது.