எழுமலை முத்தாலம்மன் கோயிலில் திருவிழா
ADDED :3645 days ago
எழுமலை: எழுமலை முத்தாலம்மன் கோயில் விழாவையொட்டி 18 முத்தாலம்மன் சாமி சிலைகள் எடுத்து வழிபாடு நடத்தினர்.நேற்று காலை 3 மணிக்கு எழுமலையில் இருந்து உத்தப்புரத்திற்கு இரு அம்மன் சிலைகள் எடுத்து வரப்பட்டன. சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு மூப்பர், பிள்ளைமார் சமூகத்தினர் முத்தாலம்மன் கோயில்களுக்கு கொண்டு சென்றனர். கிடா வெட்டி வழிபாடு நடந்த பின் சிலைகளை கோயிலுக்குள் வைத்து பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு பிறகு மற்றவர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. அம்மனை வழிபட்ட பின் கோயில் வளாகத்தில் இருக்கும் அரசமரத்தையும் வழிபட்டனர். ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், பேரையூர் தாசில்தார் சிவராமன், எஸ்.பி., விஜேந்திர பிதரி, ஏ.டி.எஸ்.பி., மாரியப்பன், டி.எஸ்.பி., சரவணக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.