மங்களநாதர் கோயிலில் சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி!
ADDED :3644 days ago
கீழக்கரை: உத்திரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பஜனை, சக்தி ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாடினர். இன்று காலை 9:30 மணிக்கு நான்குரத வீதிகளில் சந்திரசேகர சுவாமி யானை வாகனத்தில் உலாவந்து அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கிறது. இங்கிருந்து எடுத்துசெல்லும் அம்பு, ராமநாதபுரம் சமஸ்தானத்தில் நடைபெறும் மகர்நோன்பு நிகழ்ச்சியில் ராஜராஜேஸ்வரி அம்மன் மூலம் விடப்படும்.