உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு!

சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு!

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தாசலம்  விருத்தகிரீஸ்வரர் கோவிலில், விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர்   சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆயுத பூஜை சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர். மேலும், இன்று,  அம்பு விடும் நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் விநாயகர், முருகர் சுவாமிகளுக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தன. மேலும், அன்னதான உண்டியல், தானிய உண்டியல் உட்பட 10 உண்டியல்களுக்கு  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !