72 அடி உயர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3641 days ago
சென்னை : சென்னை நெற்குன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லட்சுமி சாய்பாபா கோயிலில் 72 அடி உயர ஷீரடிசாய்பாபா சிலை நிறுவப்பட்டுள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம், சாய்பாபா முக்தி அடைந்த விஜயதசமி தினமான (அக்.,22) நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இக்கோயிலில் துவாரகமாயி ஸ்தலமும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.