உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நவம்பரில் கும்பாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நவம்பரில் கும்பாபிஷேகம்

சென்னை: ஸ்ரீரங்கம் கோவில், இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம், நவம்பரில் நடக்கிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், முதல் கட்டமாக, பரமபத வாசல் கோபுரம், வடக்கு வாசல், கிழக்கு வாசல், கட்டை கோபுரம் உள்ளிட்ட, 11 கோபுரங்களுக்கும், சரஸ்வதி, கிருஷ்ணர், வேணுகோபாலன், நம்மாழ்வார், தன்வந்திரி, ஹயக்கிரீவர் உள்ளிட்ட, 43 உப சன்னிதிகளுக்கும், செப்டம்பர், 9ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 235 அடி உயர ராஜகோபுரம் உள்ளிட்ட, அனைத்து கோபுரங்கள் மற்றும் சன்னிதிகள், புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. அதனால், இரண்டாம் கட்டமாக, மூலஸ்தானம், ராஜகோபுரம், தாயார் சன்னிதி, ரங்கா கோபுரம் உட்பட, 10 கோபுரங்கள்; 15 சன்னிதிகளுக்கு நவம்பரில் கும்பாபிஷேகம் நடத்த, அறநிலைய துறை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக தேதி, ஓரிரு நாளில் அறிவிக்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !