உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஷீரடி சாய் பாபா கோவிலில் சிறப்பு பூஜை

திருத்தணி ஷீரடி சாய் பாபா கோவிலில் சிறப்பு பூஜை

திருத்தணி: ஷீரடி சாய் பாபாவின், 97ம் ஆண்டு புண்ணிய திதி சமாதி தினத்தை ஒட்டி, நேற்று மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கோ சாலை திறப்பு விழா நடந்தன. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய் நகரில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவிலில், நேற்று 97ம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை 5:15 மணிக்கு, காகட ஆர்த்தி, காலை 9:00 மணிக்கு, புண்ணியதிதி சமாதி பூஜை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, உற்சவர் சாய் நாதர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பஜனை நடந்தது.இதே போல், தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவிலில், காலை 6:00 மணிக்கு, காகட ஆரத்தியும், காலை 9:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது, இரவு 9:00 மணிக்கு, உற்சவர் பல்லக்கில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 2,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !