உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்

சூலுார் பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம்

சூலுார்: சூலுார் பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா, 18ம்தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. 19ம்தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் யாகசாலை பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவ பூஜைகள் துவங்கின. மதியம், தசமி திதி, திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு, திருக்கல்யாணம் நடந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உற்சவ மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளினர். முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் பவனி வந்தது. புதுாரார் மருதாசலத்தேவர் அறக்கட்டளை மற்றும் வாரிசுதாரர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து நகரசோதனை, அம்பு சேர்வை நடந்தது. இன்று இரவு பாரி வேட்டை, தெப்போற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !