சபரிமலை மேல் சாந்தியாக பெங்களூர்வாசி
ADDED :3753 days ago
பெங்களூரு: கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, சபரிமலையின் மேல் சாந்தியாக பெங்களூரைச் சேர்ந்த, சங்கரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவின் கோட்டயத்தை பூர்வீகமாக கொண்ட சங்கரன் நம்பூதிரி, தற்போது பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள அய்யப்பன் கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். தற்போது, சபரிமலையின் புதிய மேல் சாந்தியாக, சங்கரன் நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், திருவாங்கூர் சுப்ரமண்ய சுவாமி கோவிலின் தலைமை அர்ச்சகராக பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.