கோவையில் சரஸ்வதி நாம ஜெபவேள்வி நிறைவு
ADDED :3637 days ago
கோவை: கோவையில் கடந்த, 10 நாட்களாக நடந்த, சரஸ்வதி நாம ஜெப வேள்வி நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது. தர்மரக்ஷண சமிதி சார்பில், ஒப்பணக்கார வீதி, அத்திவிநாயகர் கோவிலில், நவராத் திரி துவக்கநாளில், வேள்வி துவங்கியது. எல்.கே.ஜி., முதல், மருத்துவம், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் வரை, வேள்வியில் பங்கேற்றனர். நேற்று நடந்த நிறைவு நாள் வேள்வியில் ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். அவர்களுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றதாக, கோவில் நிர்வாகிகள் கூறினர்.