திருப்பரங்குன்றத்தில் முருகன் அம்பு எய்தல் விழா!
ADDED :3637 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகன் அம்பு எய்தல் விழா நேற்று நடந்தது. நவராத்திரியை முன்னிட்டு கோவர்த்தனாம்பிகை அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி வில், அம்புடன், தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்திற்கு எழுந்தருளினார். சுவாமி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அங்குள்ள வன்னி மரத்தடியில், வில், அம்பு வைக்கப்பட்டு, சந்தனம், மஞ்சள் பொடி உட்பட திரவிய அபிஷேகங்கள், விக்னேஷ்வர பூஜை, வர்ணபூஜை, முடிந்து எட்டு திக்குகளிலும், பலி பூஜை முடிந்து, சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சார்யாரிடம் வில், அம்பு வழங்கப்பட்டது. அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்தார். பின் தீபாராதனைகள் முடிந்து, பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளினார்.