பொள்ளாச்சி கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி!
ADDED :3636 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், விஜயதசமியையொட்டி, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, தினசரி சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. விழாவின் கடைசி நாளான விஜயதசமியையொட்டி, அம்மன், அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகளில், திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.