பார்வையாளர்களை கவர்ந்த இசை நிகழ்ச்சி!
ADDED :3636 days ago
பாலக்காடு: கேரளா, பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி அருகே முளயன்காவு சுப்பிரமணியர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு நடந்த, மத மைத்ரி மேள வாத்திய அரங்கேற்றம் அனைவரையும் கவர்ந்தது. கீது, நைனா பைபின், மேபி ஸ்டான்லி என, மும்மதங்களை சேர்ந்த பெண்கள், செண்டையில் நிகழ்த்திய மத மைத்ரி மேளத்தை, பார்வையாளர்கள், மெய்மறந்து ரசித்தனர். தொடர்ந்து, 23 பேர் செண்டையில் பஞ்சாரி மேளம் அரங்கேற்றினர். நிகழ்ச்சியை, குலுக்கல்லுார் பஞ்சாயத்து தலைவர் ரமணி மோகன் துவக்கி வைத்தார். நடிகர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாதவ வாத்திய வித்யாலயா தலைவர் கிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கீதா, வினோத்குமார், புஷ்பகுமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.