உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவை புனித சந்தியாகப்பர் ஆலயத்திருவிழா தேர்பவனி கோலாகலம்

ஸ்ரீவை புனித சந்தியாகப்பர் ஆலயத்திருவிழா தேர்பவனி கோலாகலம்

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் 10 ம் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் ம õலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருனை ஆராதனையும் நடந்தது. 10ம் திருவிழாவையொட்டி நேற்றுகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. கோயிலின் முன் புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் நேர்ச்சையாக மாலை, எலுமிச்சை மாலை ஆகியவற்றை செலுத்தினர். புனித சந்தியாகப்பருக்கும், மாதாவுக்கும் பக்தர்கள் நேர்ச்சை யாக வழங்கிய மாலைகள் அணி யப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது. தேருக்கும் சப்பரத்துக்கும் முன் மிக்கேல் அதி தூதர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி முன்னால் சென்றார். அப்போது பாடல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டு முன் செல்ல பக்தர்களின் கரகாசத்துடன் கோயில் முன் பிரு து புனித சந்தியாகப்பர் சப்பரத்தில் புறப்பட்டார். தொடர்ந்து மாதா தேரை பக்தர்கள் வடம் படித்து இழுக்க தேர்ப்பவனி நடந்தது. மதியம் 2.15 மணிக்கு தேர் நிலைக்கு சென்றடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி., ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் அலெக் சாண்டர், டிக்சன், öஜய க்குமார்,ரஞ்சித்குமார், பெஞ்சமின், கி÷ஷா க்கிரா சியுள், லூசன், செல்வன், பென்சிகர், இருதயராஜா, ஸ்டார்வின் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !