ஸ்ரீவை., சந்தனமாரி அம்மன் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் சந்தனமாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது.ஸ்ரீவைகுண்டம் வடக்கு யாதவர் தெருவில் உள்ள சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது.கோயில் கொடைவிழாவை முன்னிட்டு நேற்று மாலை நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோயிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு மாக்காப்பு அலங்காரம், குடியழைப்பு, தீபாராதனை நடந்தது.இன்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மஞ்சள் பானை வைத்து பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 12 மணிக்கு சாமக்கொடையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.