வாசுகிரி மலையில் லட்சார்ச்சனை
ஆழ்வார்குறிச்சி : கடையம் வாசுகிரி மலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை நடந்தது. கடையத்தில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் வழியில் வாசுகிரி மலை உள்ளது. இங்குள்ள முருகனுக்கு ஆடி கிருத்திகை நாளான நேற்று காலையில் கடையம் யூனியன் சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமிசுந்தரி, இந்திரா, தர்மகர்த்தா சண்முகவேலாயுதம் முன்னிலையில் சுப்பிரமணியபட்டர், செந்தில்பட்டர், குமார்பட்டர், சங்கர்நகர் பாலா, சேரன்மகாதேவி ராஜா, ரவணசமுத்திரம் கிருஷ்ணபட்டர் ஆகியோர் கும்ப ஜெபம், வேதபாராயணம், மகா ஹோமம் ஆகிய வைபவங்களும், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடத்தினர்.மாலை 4.30 மணிக்கு முருகனுக்கு ராஜ அலங்கார தீபாராதனை நடந்தது. முன்னதாக மலைமேல் உள்ள விநாயகர், வேல் மற்றும் முருகனின் பாதங்களுக்கும், மூலவரின் பின்புள்ள சக்கரத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மாலை சிறப்பு புஷ்பாஞ்சலியும், அதனை தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது.ஏற்பாடுகளை கடையம் யூனியன் அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்தக்காரர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு கடையம் யூனியன் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.