அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அம்பு சேர்வை சிறப்பு வழிபாடு
ADDED :3638 days ago
அவிநாசி: விஜயதசமியன்று, அம்பு சேர்வை வழிபாடு நடைபெறும். ரிஷப வாகனத்தில் அவிநாசி லிங்கேஸ்வரர், குதிரை வாகனத்தில் ஆகாசராயர் மற்றும் கருட வாகனத்தில் கரிவரத பெருமாள் ஆகிய மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்றனர். சேவூர் ரோட்டில் உள்ள பரிவேட்டை மண்டபத்தில், உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. பின், காமாட்சியம்மன் கோவில் வன்னி மரத்தில், அம்பு சேர்வை நிகழ்ச்சி நடந்தது. * ராயம்பாளையம், ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பஜனை நடந்தது; முத்தங்கி அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளினார். பின், அன்ன தானம் நடைபெற்றது.