அங்காளம்மனுக்கு அனந்தசயன அலங்காரம்
ADDED :3695 days ago
புதுச்சேரி: சின்னசுப்பராயப்பிள்ளை வீதி அங்காளம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் ஸ்ரீஅனந்த சயனத்தில் அருள்பாலித்தார். சின்னசுப்பராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 13ம் தேதி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று சுவாமி ஸ்ரீஅனந்த சயனம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நாளை அம்மனுக்கு ஸ்ரீகாளிகாம்பாள் அலங்காரம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.