கவுரி விநாயகர் கோயில் யாகசாலை பூஜை துவக்கம்
ADDED :3639 days ago
திருப்புத்தூர்: சிவகங்கைதம்பிபட்டி கவுரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின.புதிதாக ஆதிவிநாயகர், மகாலட்சுமி, துர்க்கை கோபுரத்துடன் கூடிய தனி சன்னதிகள், முன்மண்டபம்,சாளரம்,திருவாச்சி திருப்பணி நடந்துள்ளது.தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று வாஸ்து பூஜை நடைபெற்றது. இன்றும்,நாளையும் காலை, மாலை நேரங்களில் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. அக்.26ல் காலை 7 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜையும், காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 9.40 மணிக்கு விமான, மூலவர் கும்பாபிஷேகமும் காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.