உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்

ஊத்துக்கோட்டை சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்

ஊத்துக்கோட்டை: சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். எல்லாபுரம் ஒன்றியம், பனையஞ்சேரி கிராமத்தில், பகுதிவாசிகளின் பங்களிப்புடன், சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்ததையடுத்து, கடந்த, 14ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது; 20ம் தேதி முதல், கும்பாபிஷேக விழா துவங்கியது. கணபதி பூஜை, கோ பூஜை, நான்கு கால யாக பூஜைகள் என, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !