வனதுர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3641 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வனதுர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகரில் மகாகணபதி, வனதுர்க்கையம்மன் , அங்காள பரமேஸ்வரி கோவில்கள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. இதற்கான கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 10:35 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு, மயிலம் பொம்மபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:02 மணிக்கு, முண்டியம்பாக்கம் கண்ணன் குருக்கள் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினார். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜாராம் தலைமையில் பூசாரிகள் ராமலிங்கம், காசிநாதன், ஸ்தபதி குப்புசாமி, திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.