பொள்ளாச்சி கோவிலில் கும்பாபிேஷக விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி., காலனி 1 பாரதி வீதி மங்கள விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு சக்தி திருமண மண்டபத்திலிருந்து தீர்த்தம், முளைப்பாரி அழைத்தல்; மாலை, 5:30 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், இரவு, 9:00 மணிக்கு முதற்கால யாக வேள்வி, இரவு, 10:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இன்று, காலை, 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, பழ நைவேத்திய நவதானியங்களை கொண்டு வேள்விகள் ஆரம்பம், காலை, 9:05 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, காலை, 9:15 மணிக்கு மேல் 9:45 மணிக்குள் விமான கும்பாபிேஷகம், மூலாலயம் மகா கும்பாபிேஷகம்; காலை, 10:00 மணிக்கு அன்னதானம் ஆரம்பம், காலை, 10:15 மணிக்கு மகா அபி ேஷகம், மதியம், 12:00 மணிக்கு சிறப்பு சந்தன அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.