உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் மலையில் சேதமுற்றுள்ள படிக்கட்டுகள்: அவதியில் பக்கதர்கள்

திருப்பரங்குன்றம் மலையில் சேதமுற்றுள்ள படிக்கட்டுகள்: அவதியில் பக்கதர்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீது சேதமுற்று வரும் படிக்கட்டுகளால், பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். படிக்கட்டுகளை சீரமைக்கவும் வலியுறுத்துகின்றனர். மலை மீது உச்சிப்பிள்ளயார் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், தர்ஹா உள்ளன. புரட்டாசியில் மலை மீது குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடக்கும். இதில் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேல், பல்லக்கில் மலை மீது கொண்டு செல்லப்படும். கார்த்திகை மாதம், மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். சந்தனக்கூடு திருவிழாவின் போது, சந்தனம் மலைக்கு கொண்டு செல்லப்படும். தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பெரிய ரத வீதி வழியாக மலைக்கு செல்கின்றனர். சரவணப் பொய்கை அருகே புதிதாக படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தாலும், துாரம் அதிகம் என்பதாலும், அங்கு மரங்கள் இல்லாததாலும் பெரும்பாலானோர் பழைய படிக்கட்டுகள் வழியாகத்தான் மலைக்கு செல்கின்றனர். அங்கு பழங்காலத்தில் கற்களால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் இன்றும் பயன்பாட்டிலுள்ளன. இதில் பல இடங்களில் படிக்கட்டு பக்கவாட்டில் இருந்த கற்கள் விழுந்து விட்டன. பல படிக்கட்டுகள் மேல் பகுதி கரடு முரடாக காட்சியளிக்கின்றன. சில படிக்கட்டுகள் சேதமுற்று சிதிலமடைந்து வருகின்றன. இதனால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். பழுதடைந்து வரும் படிக்கட்டுகளை சீரமைத்து, பாதையில் மின் விளக்குகள், குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !