உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமிர்தவள்ளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

அமிர்தவள்ளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சின்னாண்டிக்குழி அமிர்தவள்ளி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவைö யாட்டி கடந்த 24ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி முதல்கால யாகசாலை பூஜையும் இரவு மகா தீபாராதனையும் நடந்தது. 25ம் தேதி  காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, சுவாமி கண் திறப்பும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும்  நடந்தது. தொடர்ந்து நேற்று (26ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோபூஜை, கஜபூஜை, நான்காம் கால யாகசாலை பூஜையும் 9:00 மணிக்கு கடம் புறப் பாடாகி, 9:30 மணிக்கு கணபதி, அய்யனார், வேப்பிலை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், 10:00 மணிக்கு அமிர்தவள்ளி  அம்மனுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10:20 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி,  சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !