உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

பரமக்குடி: பார்த்திபனூர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் பக்தர்களின் "ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மகாபாரத காலத்தில், அர்ச்சுனன்(பார்த்திபன்) வழிபாடு நடத்தியதால், இவ்வூர் பார்த்திபனூர் என பெயர் பெற்றது. மதுரையில் சிவபெருமானின் திருவிளையாடலின் போது, நக்கீரர் சாபம் நீங்க இங்கு வழிபாடு நடத்தியதாகவும் தலவரலாறு கூறுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பின் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அக். 22 முதல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. 4 கால பூஜைகளுக்கு பின் நேற்று காலை 10.15 மணிக்கு சுவாமி, அம்மன் மூலஸ்தான விமானங்கள் மீது வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் சர்வசாதகம் செய்துவைத்தார். தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !