உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை

தர்மபுரி : தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்பிகை சமேதர மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முதல் ஆடி வெள்ளியன்று, மாலை 5 மணிக்கு பூப்பந்தல் அலங்கார தரிசனத்தில் கந்தரலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். வரும் 29ம் தேதி அர்த்தாம்பிகை அலங்காரமும், 30ம் தேதி ஆடி 14ம் நாளில் சர்வ ஆடி அமாவாசை, 18ம்படி திருவடி பூஜை, குங்குமத்திருவிழா நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு மஹா அபிஷேகம, காலை 10.30 மணிக்கு திருப்படி மஹா அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு நிகும்பலா யாகம், மாலை 5.45 மணிக்கு 18ம் டி பூஜை, மாலை 6.15 மணிக்கு கல்யாண காமாட்சி திருச்சுற்று வலம் வருதல் நடக்கிறது. ஆகஸ்ட் 2ம் தேதி மூன்றாம் செவ்வாய் அன்று காலை 10.30 மணிக்கு மஹா அபிஷேக தரிசனம், மதியம் 12.30 மணிக்கு மஹா தீபாராதனை, ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி தரிசன காட்சி மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கல்யாண காமாட்சி வளைகாப்பு மஹா தீபாராதனையும் மாலை 4.30 மணிக்கு 5 மணிக்குள் வடைமாலை சாத்துப்படி நடக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதி அம்மன் கருமாரியம்மன் அலங்காரத்திலும், 12ம் தேதி கமலாட்சி அலங்காரத்திலும் அம்மன் அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ், நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் செல்லமுத்து குமார சுவாமி சிவாச்சாரியார் மற்றும் ராஜதுர்க்காம்பிகை பவுர்ணமி வார வழிபாட்டு பேரவை மற்றும் ஸ்ரீ கால பைரவர் அஷ்டமி வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !