அமரபுயங்கரீஸ்வர் கோவிலில் அன்னாபிேஷக விழா!
ADDED :3717 days ago
உடுமலை: உடுமலை அருகே அமரபுயங்கரீஸ்வர் கோவிலில் நடந்த அன்னாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த, அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில், நேற்று பகலில், மகா அன்னாபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். உடுமலை தில்லை நகர், ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், மாலை 6:00 மணிக்கு, அன்னாபிேஷக பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.